உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முனைவென்றியில் குண்டும் குழியுமாக ரோடு

முனைவென்றியில் குண்டும் குழியுமாக ரோடு

இளையான்குடி : இளையான்குடி அருகே முனைவென்றியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள ரோடு குண்டும்,குழியுமாக உள்ளதால் அவதிக்குள்ளாகின்றனர்.முனைவென்றி அறிவொளி நகரில் இருந்து முனைவென்றி கிராமத்திற்கு செல்லும் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இந்த ரோடு தற்போது குண்டும், குழியுமாகவும காடசி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளாகியும் சீரமைக்காமல் உள்ளன. கிராம மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை