உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்தூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது தாமதமாகிறது

திருப்புத்தூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது தாமதமாகிறது

திருப்புத்துார் பேரூராட்சி மாவட்டத்தின் மிகவும் பழமையான பேரூராட்சியாகும். தற்போது 18 வார்டுகளுடன் 14.4 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. இங்கு 12,962 கட்டுமானங்களுடன் 115 தெருக்களில் 51 ஆயிரத்து 960 பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த கடந்த 1990 முதல் முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் முயற்சி எடுக்கப்பட்ட கீழக்கரை, ராமேஸ்வரம்,இப்போது மானாமதுரை பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டன. ஆனால் திருப்புத்துார் பேரூராட்சி மட்டும் எட்டாக் கனாவாகவே உள்ளது.போதிய வருவாய் மற்றும் மக்கள் தொகை இருந்தும், தேவைப்பட்டால் கூடுதலாக வருவாய், நிலப்பரப்பு, மக்கள் தொகைக்கு அருகிலுள்ள காட்டாம்பூர், ரணசிங்கபுரம், வாணியம்பட்டி,நெடுமரம் ஊராட்சிகளைச் சேர்ந்த குடியிருப்பு பகுதிகள் சேர்க்க வாய்ப்பிருந்தும் தரம் உயர்த்தப்படவில்லை. பல கிராம குடியிருப்புகள் பேரூராட்சியுடன் இணைந்துள்ளதால் சமமாக, பரவலான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துவதில் சிரமம் காணப்படுகிறது.சிறிய பேரூராட்சிகளில் கூட தரம் உயர்த்த அருகிலுள்ள கிராமங்கள் சேர்ப்பது குறித்து அண்மையில் கருத்துரு கேட்கப்பட்டது. அது போல காரைக்குடி நகராட்சிக்கு கருத்துரு கேட்கப்பட்டு அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் திருப்புத்துார் பேரூராட்சி தரம் உயர்த்த எந்த கருத்துருவும் கேட்கப்படவில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கூறுகையில், அரசிடமிருந்து பக்கத்து ஊராட்சிகள் சேர்ப்பது குறித்து எந்த கருத்துருவும் வரவில்லை. நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான எந்த அறிவுறுத்தலும் அரசிடமிருந்து வரவில்லை. ' என்றார். மற்ற சிறு நகரங்கள் கடந்த 25 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியை திருப்புத்துாரில் நிதிப் பற்றாக்குறையால் பார்க்க முடியவில்லை. விஸ்தரிப்பு பகுதிகளில் ஆமை வேகத்திலேயே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப் படுகிறது. கடந்த 55 ஆண்டுகளில் 2 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் நிறைவேற்ற முடியவில்லை.திருப்புத்துாருக்கு கேட்காமலேயே கிடைத்தது தேசிய நெடுஞ்சாலைகள் தான். தேசிய நெடுஞ் சாலைகளில் புறவழிச் சாலைக்குள் திருப்புத்துார் நகராட்சி அமையும் வண்ணம் 'மாஸ்டர் பிளான்' அமைத்து நகராட்சியாக தரம் உயர்த்தினால் தான் நகருக்கேற்ற அந்தஸ்தும், அடிப்படைக் கட்டமைப்பு வலுப்பெறவும் முடியும். அதற்கான முயற்சிகளில் தற்போதைய பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி