உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேட்டரிகள் திருட்டு

பேட்டரிகள் திருட்டு

தேவகோட்டை : தேவகோட்டை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நெம்மேனி கிராமம். இந்த கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டவர்கள் உள்ளன. இப்பகுதி டவர் செயலிழந்ததால் அந்த பகுதியில் அலைபேசிகள் செயல்பட வில்லை. சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நிறுவன தொழில்நுட்ப அலுவலர் பிரசாந்த் 27, நெம்மேனி டவரை பார்வையிட்டார். அதில் இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 24 பேட்டரிகளை யாரோ திருடியது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ