| ADDED : ஜன 22, 2024 04:59 AM
தேவகோட்டை: அயோத்தியில் இன்று ராமர் பிரதிஷ்டை நடக்கும் அதே நேரத்தில் தேவகோட்டையிலும் ராமர் பிரதிஷ்டை நடக்கிறது. -தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் கும்பகோணம் ஐம்பொன்னால் ஆன ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் விக்ரகங்களை இன்று மதியம் 12:00 மணிக்கு பிரதிஷ்டை செய்கின்றனர். கோயில் குருக்கள் கருப்பு கூறியதாவது, இன்று அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடக்க உள்ளது. அதே நேரத்தில் இங்கு ராமர்,சீதை, லட்சுணன், ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், பூஜைகள் நடக்கிறது, என்றார்.