| ADDED : நவ 20, 2025 04:15 AM
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் ஒன்றியம் வடமாவளி அணைக்கட்டு,மூன்று கண்மாய்களில் பராமரிப்பு,புனரமைப்பிற்கான ரூ 4 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் வடமாவளி அணைக்கட்டு சீரமைப்பு, வடமாவளி, குமுளி,கருவேல்குரிச்சி கண்மாய்களின் கலுங்கு,மடைகள் மறுகட்டுமானம், பாசனவாய்க்கால், கரைபலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. அதற்கான பூமி பூஜையை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இப்பணியால் 3 கண்மாய்களின் நீர்வரத்து பகுதியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பலனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கீழ்வைகை வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் அண்ணாத்துரை, மணிமுத்தாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் செளந்தர், விருசுழியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் ஆனந்த்,மரியராஜ்,பரணிதரன், ஆனந்தராஜ் பங்கேற்றனர்.