உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெள்ளிக்குறிச்சி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை

வெள்ளிக்குறிச்சி பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை

மானாமதுரை: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானையுடனான முருகப்பெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை,பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடக்கும்.இந்த ஆண்டு வரவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதமிருந்தனர்.பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை, திண்டுக்கல் வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை