உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெட்வொர்க் பிரச்னையால் ‛வாக்கி டாக்கி பயன்பாடின்றி தவிப்பு

நெட்வொர்க் பிரச்னையால் ‛வாக்கி டாக்கி பயன்பாடின்றி தவிப்பு

பழையனுார்: பழையனுாரில் நெட்வொர்க் சரிவர கிடைக்காததால் போலீசார் அவசர காலங்களில் வாக்கி டாக்கியில் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை உட்கோட்டத்தை சேர்ந்த திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, பழையனூர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகின்றன.ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் இன்ஸ்பெக்டர் ஜீப், ரோந்து போலீசார் ஆகியோரை தொடர்பு கொள்ளும் வண்ணம் வாக்கி டாக்கி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.பழையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கிடாக்கி சரிவர செயல்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. பல ஆண்டாக பழையனுார் போலீஸ் ஸ்டேஷனை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளவே முடியாது.போலீசாரும் ஸ்டேஷனுக்குள் போகும்போது நெட்வொர்க் கிடைக்காமல் அலைபேசி, வாக்கி டாக்கியுடன் ரோட்டிற்கு வந்துதான் பேச முடிகிறது. நாடு முழுவதும் அதி நவீன கருவிகள் வாகனங்கள் வந்த போதும் பழையனூர் மட்டும் தனி தீவாக உள்ளது. வயர்லெஸ் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆண்டெனா சரிவர செயல்படாததால் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தரையில் வைத்து முண்டு கற்களை வைத்து சரி செய்துள்ளனர். பழையனூர் கிராமம் விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.மணல் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வரும் இப்பகுதியில் போலீசாரால் அவசரத்திற்கு மற்றவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை.பலமுறை இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழையனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அதி நவீன தொலை தொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை