உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிளஸ் 2ல் சிவகங்கை முதலிடம் வர பாடுபடுவோம்: சி.இ.ஓ.,

 பிளஸ் 2ல் சிவகங்கை முதலிடம் வர பாடுபடுவோம்: சி.இ.ஓ.,

சிவகங்கை: பத்தாம் வகுப்பை போன்றே பிளஸ் 2 தேர்விலும் தமிழக அளவில் சிவகங்கையை முதலிடத்திற்கு கொண்டு வர ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என சிவகங்கையில் நடந்த தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பேசினார். சிவகங்கையில் அரசு, உதவி பெறும் 198 உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., பி.ஏ.,க்கள் முனியாண்டி, வெங்கடமுத்து நடேசன், உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது: கடந்த அரசு பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்தது போன்றே, பிளஸ் 2 மாணவர்களும் வரும் கல்வி ஆண்டில் முதலிடம் பிடிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அடிக்கடி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வினை நடத்தி, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்கள் நீட், ஜெ.இ.இ., மேலாண்மை போன்ற போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில், மாதிரி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை தவிர்க்க, பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அரசு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், தற்போது பாடங்கள் அனைத்தையும் நடத்தியாச்சு. இனி வரும் காலங்களில் அடிக்கடி திருப்புதல் தேர்வு நடத்தி மாணவர்களை அரசு பொது தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை