உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி துவங்குவது எப்போது: தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி துவங்குவது எப்போது: தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கீழடி: கீழடி, கொந்தகையில் 10ம் கட்ட அகழாய்வு தொடங்க தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கின.மத்திய தொல்லியல் துறையின் மூன்று கட்ட அகழாய்வு பணிகளில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், உறைகிணறுகள், தந்த பகடை, வரிவடிவ எழுத்துகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை 6 கட்ட அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. ஒவ்வொரு வருடமும் அகழாய்வு ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும். அதன்பின் மழை காலமாக இருப்பதால் இப்பணி நடக்காது. கடந்தாண்டு அருங்காட்சியக கட்டட பணிகள் நடந்ததால் 9ம் கட்ட அகழாய்வு மார்ச்சில் 14 குழிகள் தோண்டியதில் ஸ்படிக எடைக்கற்கள், பாம்பு உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட 804 பொருட்கள் எடுத்தனர்.கொந்தகையில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு 26 முதுமக்கள் தாழி கண்டறிந்து அதில் இருந்த சுடுமண் பானைகள், கிண்ணங்கள் ஆய்விற்காக சென்றுள்ளன. 9ம் கட்ட அகழாய்வு செப்டம்பருடன் முடிந்தநிலையில் 10ம் கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய தொல்லியல் துறையிடம், தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்ததும் ஜனவரியில் பணி தொடங்கப்படும். எம்.பி., தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால், அதற்கு முன்னரே 10ம் கட்ட அகழாய்வு பணிக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை