உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழையனுார் பாலம் கட்டுமான பணி மந்தம் எட்டு கிராம மக்கள் பிரச்னை எப்போது தீரும்

பழையனுார் பாலம் கட்டுமான பணி மந்தம் எட்டு கிராம மக்கள் பிரச்னை எப்போது தீரும்

பழையனுார் : திருப்புவனம் அருகே பழையனுார் - ஓடாத்துார் இடையே கிருதுமால் நதியில் பாலம் கட்டுமான பணி மந்தமாக நடப்பதாக எட்டு கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழையனுாரைச் சுற்றியுள்ள ஓடாத்துார், எழுவனுார், வல்லாரேந்தல், வாகைகுளம், சேந்தநதி உள்ளிட்ட எட்டு கிராமமக்கள் தங்களது தேவைகளுக்காக பழையனுார் வந்து செல்கின்றனர். சுற்று வட்டார கிராம மக்களின் மருத்துவ வசதிக்காக பழையனுாரில் ஆரம்ப சுகாதார நிலையமும், அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் விதை நெல், உரம் உள்ளிட்டவை வாங்க பழையனுார் வரும் வழியில் பழையனுார் - ஓடாத்துார் இடையே கிருதுமால் நதி தரைப்பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். மழை காலங்களிலும், கிருதுமால் நதியிலும் தண்ணீர் திறப்பின் போது தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மருத்துவம் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.இப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பழையனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மழை காலங்களில் கிருதுமால் நதியில் தண்ணீர் செல்வதால் பள்ளி செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக் கையை அடுத்து கடந் தாண்டு ஜூலை நபார்டு வங்கி உதவியுடன் மூன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டி எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை இரண்டு துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுஉள்ளன. மூன்றரை கோடி ரூபாய் பாலப்பணிகளை வெறும் ஐந்து கூலி தொழிலாளர்களே ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர்.கோடை காலம் என்பதால் பணிகளை விரைந்து முடித்து எட்டு கிராமமக்களின் பயன்பாட்டிற்கு பாலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை