உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / சிறுவன் தலையில் 14 ஸ்டேப்லர் தையல் போட்ட போலி மருத்துவர் கைது * 12 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தார்

சிறுவன் தலையில் 14 ஸ்டேப்லர் தையல் போட்ட போலி மருத்துவர் கைது * 12 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தார்

தென்காசி:சிறுவனின் தலையில் ஸ்டேப்லர் மூலம் 14 தையல் போட்ட போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைகோயில் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். தொழிலாளி. மகன் கவுசிக் 10, ஐந்தாம் வகுப்பு மாணவன். கடந்த 7ம் தேதி சைக்கிளில் செல்லும்போது கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். அங்குள்ள சூர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர் அமிர்தலால், சிறுவனின் தலையில் ஸ்டேப்லர் மூலம் 14 இடங்களில் பின் அடித்துள்ளார். அடிபட்ட இடத்தில் சுத்தம் செய்யாததாலும் மணல் துகள்கள், ஸ்டாப்ளர் ரத்த காயத்தால் இரண்டு நாட்கள் சிறுவன் அவதிப்பட்டான். அந்த இடத்தில் மேலும் புண் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்றான். சிறுவனை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தலையில் இருந்த ஸ்டாப்லர் பின்களை அகற்றி தையல் போட்டனர்.தென்காசி மாவட்ட நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, விசாரணையில் 12 ஆண்டுகளாக அமிர்தலால் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அமிர்தலால் டாக்டருக்கு படிக்காதவர். எனவே துணை இயக்குநர் புகாரின் பேரில் அச்சன்புதுார் போலீசார் போலி டாக்டர் அமிர்தலாலை கைது செய்தனர்.அரசு டாக்டர் உடந்தை :சூர்யா மருத்துவமனையில் டாக்டர் என திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு பெயர் உள்ளது. அந்த மருத்துவமனைக்கு உரிமம் பெற டாக்டர் பாபு பரிந்துரைத்துள்ளார். எனவே 12 ஆண்டுகளாக போலி மருத்துவமனைக்கு துணை போன அரசு டாக்டர் பாபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பாபுவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.மருத்துவமனையின் லைசென்ஸ் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ