உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நால்வர் கைது

அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நால்வர் கைது

தென்காசி:வாசுதேவநல்லூர் அருகே இரவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி மற்றும் அருளாச்சியில் இரவில் பயணிகளுடன் சென்ற 2 அரசு பஸ்கள் மீது முகமூடி அணிந்த வாலிபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் ஒரு பஸ் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா, புது காலனி தமிழ் ஈஸ்வரன், கருப்பசாமி, கண்ணன் கைது செய்யப்பட்டனர்.குண்டர் சட்டம்தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராமசாமியாபுரத்தை சேர்ந்த சுரேஷ் 27, என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி