உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பள்ளி மாணவன் வாந்தி எடுத்து பலி; மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

பள்ளி மாணவன் வாந்தி எடுத்து பலி; மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 5ம் வகுப்பு மாணவன் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாந்தியெடுத்து இறந்தார். குடும்பத்தினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.செங்கோட்டை காமாட்சிதெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் அசோக்குமார் 9. செங்கோட்டையில் உள்ள கச்சேரி காம்பவுண்ட் நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற இவர் வீட்டில் இருந்து டிபன் பாக்சில் கொண்டு வந்த சாம்பார் சாதத்தை மதிய உணவாக சாப்பிட்டார். தொடர்ந்து அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியதால் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தார். செங்கோட்டை போலீசார் விசாரித்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை