உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  பஸ் விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மாணவி

 பஸ் விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மாணவி

தென்காசி: கடையநல்லூர் பஸ் விபத்தில் தனது தாயை இழந்த இளம் பெண் கீர்த்திகா அரசிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்தார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் நேற்று முன்தினம் இரண்டு தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட ஏழு பேர் பலியானார்கள். இந்த விபத்தில் இறந்த புளியங்குடி டி.என். புதுக்குடியைச் சேர்ந்த மல்லிகா 55. பீடி சுற்றும் தொழிலாளி. இவரது ஒரே மகள் கீர்த்திகா 33. பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தாய் மல்லிகாவின் இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. அதில் கீர்த்திகாவும் கண்ணீர் மல்க பங்கேற்றார். தமது தாயாரின் இழப்பால் தமது வாழ்க்கையே நிலை குலைந்து விட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், எனது தந்தை முத்துராமன், நான் 5ம் வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டார். எனது ஒரே அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியே சென்று விட்டார். மல்லிகாதான் பீடி சுற்றி என்னை படிக்க வைத்தார். நான் தற்போது எம்.ஏ. பி.எட். படித்து ஆசிரியர் பணிக்கு முயற்சித்து வருகிறேன். பார்வையற்ற என்னை எனது தாயார் தான் கல்வி நிலையங்களுக்கும் தேர்வுகளுக்கும் அழைத்துச் செல்வார். தந்தை, தாய் உறவுகளை இழந்து நான் தனிநபர் ஆகிவிட்டேன். நான் படித்து வேலைக்கு சென்று என் தாயாரை காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையில் இருந்தேன். தற்போது நிராதரவாய் ஆகி விட்டேன். ஆசிரியர் பணிக்கு படித்து வரும் தமக்கு அரசும், தமிழக முதல்வரும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை