உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  விபத்தில் தாய் உயிரிழப்பு மகளுக்கு தற்காலிக பணி

 விபத்தில் தாய் உயிரிழப்பு மகளுக்கு தற்காலிக பணி

தென்காசி: கடையநல்லுார் அருகே நடந்த பஸ் விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி மகளுக்கு, அரசு தற்காலிக பணி வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 7 பேர் பலியாகினர். இதில் புளியங்குடியை சேர்ந்த மல்லிகா, 55, உயிரிழந்தார். அவரது மகள் கீர்த்திகா, 33, பார்வையற்ற மாற்றுத்திறனாளி. 5 வயதில் தந்தையை இழந்தவர், தற்போது தாயையும் இழந்த நிலையில், 'வேலை வேண்டும்' என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், கீர்த்திகாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறினார். பின், வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்படி தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், கீர்த்திகாவின் வீட்டிற்கு நேரில் சென்று, புளியங்குடி நகராட்சியில், தற்காலிக டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை