மேலும் செய்திகள்
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
15-Dec-2025
சிறுமிக்கு தொல்லை ஆசிரியருக்கு கம்பி
13-Dec-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கல்லுாரி சாலையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.75 லட்சம் மதிப்பில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்வில், கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் வந்தார். அப்பகுதியினர் பலரும் எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். உடனே அவர், அப்பகுதியை சேர்ந்த காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞரான ஹரிஹரன், 22, என்பவரை அழைத்துச் சென்று, அவரது கையில் கத்திரிகோலை கொடுத்து, ரிப்பனை வெட்ட வைத்து, பஸ் ஸடாப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
15-Dec-2025
15-Dec-2025
13-Dec-2025