மேலும் செய்திகள்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
05-Oct-2025
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர், : தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதிகா, 30. இவர்களின் மகன் மோனிஷ், 9.நேற்று காலை, 10:30 மணிக்கு, ஸ்கூட்டரில், ராதிகா தன் மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு, பரவாக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.கீழக்குறிச்சி அருகே சென்ற போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை ராதிகா முந்த முயன்றார். அப்போது, சாலையின் எதிர்புறம், திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 18, என்ற கல்லுாரி மாணவர், 'பல்சர்' பைக்கில் மதுக்கூருக்கு வந்து கொண்டிருந்தார்.இதில், ராதிகா, விக்னேஷ் இருவரின் வாகனங்களும் நேருக்கு நேர்வேகமாக மோதின. இரு வாகனங்களும் நொறுங்கியதில், ராதிகா, மோனிஷ், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மதுக்கூர் போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான விக்னேஷ், கும்பகோணம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
05-Oct-2025
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025