மேலும் செய்திகள்
அமைச்சரின் விழாவில் மப்பு கூட்டுறவு அதிகாரி சஸ்பெண்ட்
13 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணியாளர் தற்கொலைக்கு முயற்சி
20 hour(s) ago
தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய மகன் கைது
16-Nov-2025
தஞ்சாவூர்: சிறுமியரை கர்ப்பமாக்கிய மயிலாடுதுறை மாணவர்கள் இருவர், போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, மயிலாடுதுறை கல்லுாரியின் 18 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர், திருவிடைமருதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சோதனையில், சிறுமி இரண்டு மாத கர்ப்பம் என தெரிந்தது. பெற்றோர் புகாரில், திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருபுவனம் மேல்நிலை பள்ளி ஒன்றில் பிளஸ் 2- படிக்கும், 17 வயது சிறுமிக்கும், மயிலாடுதுறை கல்லுாரியின் இன்னொரு 18 வயது மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் உடலில் மாற்றம் ஏற்படவே, பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பம் என தெரிந்தது. பெற்றோர் புகாரில், திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் அந்த மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
13 minutes ago
20 hour(s) ago
16-Nov-2025