உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  நகை கடைக்காரரிடம் ரூ.93 லட்சம் மோசடி மர்ம நபரின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்

 நகை கடைக்காரரிடம் ரூ.93 லட்சம் மோசடி மர்ம நபரின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்

தஞ்சாவூர்: நகைக்கடை உரிமையாளரிடம், 93 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களின் மூன்று வங்கி கணக்குகள் போலீசாரால் முடக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த முருகப்பன், 70, நகை அடகுகடை மற்றும் சிட் பண்ட்ஸ் நடத்தி வருகிறார். பண பரிமாற்றம் இவரிடம், 'வாட்ஸாப்' மூலம், தன்னை போலீஸ் எனக்கூறி, அறிமுகம் செய்து கொண்ட மர்ம நபர், 'உங்கள் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக, 3 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது. 'மேலும், தங்கள் ஆதார் கார்டு மூலம், சிம் கார்டுகள் வாங்கப்பட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. 'உங்கள் மீது குற்றம் இல்லை என்றால், நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வோம்' என, மிரட்டியுள்ளார். பயந்து போன முருகப்பன், நான்கு தவணையாக, 93 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். முருகப்பனை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக, இரண்டாவது முறையாக பணம் அனுப்பிய போது, 30,000 ரூபாயை மட்டும் திருப்பி அனுப்பி உள்ளார். பின், முருகப்பனுக்கு பணம் வராத நிலையில், மொபைல் போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்ற போது, 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துஉள்ளார். சைபர் கிரைம் இது குறித்து, சைபர் கிரைம் போலீசில், முருகப்பன் புகார் அளித்தார். விசாரணையில், மர்ம நபர், கர்நாடகா, தமிழகம், கேரளாவில் உள்ள மூன்று வங்கி கணக்குகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே, அந்த வங்கி கணக்கில் இருந்த, 2.94 லட்சம் ரூபாயை, சைபர் கிரைம் போலீசார் முடக்கி, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ