மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
15-Dec-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் நேரு மொத்த காய்கறி அங்காடி, அறிஞர் அண்ணா காய்கறி மார்கெட்டில் தற்சமயம் 383 தரைக்கடை வியாபாரிகளும், 140 ஷட்டர் கடை வியாபாரிகள் உள்ளனர். சில்லறை காய்கறி அங்காடி வளாகத்தில் உள்ள தரைக் கடைகளுக்கு, தினசரி கட்டணம் வசூல் செய்யும் உரிமையை ஆசைதம்பி என்பவர் டெண்டர் எடுத்தார்.ஆனால், நாள் ஒன்றுக்கு, கடை ஒன்றுக்கு வசூல் தொகை 60 ரூபாயை வசூலிக்காமல், மாநகராட்சிகளின் விதிகளை மீறி, 240 ரூபாய் வீதம், வியாபாரிகளிடம் இருந்து 2022ம் ஆண்டு தலா 70,000 ரூபாய், 2023ம் ஆண்டு தலா 80,000 ரூபாயை ஆசைதம்பி வசூல் செய்தார். இதற்கான ரசீதும் வழங்கவில்லை. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, வழக்கில், நிர்ணாயிக்கப்பட்ட வசூல் தொகையை மீறி, கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ஐந்து ரூபாய் என வாடகையை நிர்ணயம் செய்தது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று முன் தினம் மாநகராட்சி பணியாளர்கள் கடை அளவீடு பணிகளுக்கு வந்தனர்.வாடகை குறித்து தெளிவான அறிவிப்பு வரும் வரை, எந்த அளவீடு பணிகளும் செய்ய கூடாது என மார்கெட் தரை கடை வியாபாரிகள் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
15-Dec-2025
15-Dec-2025
15-Dec-2025