உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  பெரியகோவிலில் சுகமாக படுத்து உறங்கும் நாய்கள்

 பெரியகோவிலில் சுகமாக படுத்து உறங்கும் நாய்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக திகழ்கிறது. இக்கோவில், இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோவிலின் கட்டுமானம் மற்றும் சிற்பங்களை காண, ரசிக்க பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் சுற்றுலா பயணியர், பக்தர்கள், தினமும் ஆயிரக்கணக்கில் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில், கோவில் வளாகம் முழுதும், பல்வேறு கட்டுப்பாடுகளை மீறியும், நாய்கள் சுதந்திரமாக கோவிலின் நுழைவாயில் முதல் அனைத்து சுவாமி சன்னிதிகள் வரையும் சுற்றித் திரிவதால், சுற்றுலா பயணியரும், பக்தர்களும் மிகுந்த அச்சத்துடன், எச்சரிக்கையுடன், கோவில் உள்ளே சென்று வருவதாக கூறுகின்றனர். சிலரை நாய்கள் கடிக்க முயன்றுள்ளதாகவும் கூறினர். இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஜீவக்குமார் கூறியதாது: ஆன்மிகத்தின் அடையாளமாகவும், மிகப்பெரிய வரலாற்றுச் சின்னமாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கும் தஞ்சை பெரிய கோவிலின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு, தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளன. நுழைவாயில் முதல் கோவில் முழுதும் தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுலா பயணியர், பக்தர்களிடம் கடுமையாக நடக்கும் நிலையில், கோவில் வளாகத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் நாய்களிடம் காட்டுவது கிடையாது. கோவில், இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டிலும், பூஜை நடைமுறைகள் அரண்மனை தேவஸ்தான் மற்றும் அறநிலையத்துறை வசமும் உள்ளன. இப்படியாக இருவரும் நாய்களை கட்டுபட்டுதா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நம் கலாசாரத்தை விரும்பி ரசிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கோவிலின் உள்ளே நாய்கள் உலா வருவதை அச்சம் கலந்த கேளிக்கையுடன் பார்த்து முகசுளித்து பேசி செல்வது வேதனையான ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை