உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இளம்பெண் ஆணவ கொலை வழக்கில் மேலும் மூவர் கைது

இளம்பெண் ஆணவ கொலை வழக்கில் மேலும் மூவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த பெருமாள் - ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா, 19.பூவாளுரில் வசிக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நவீன், 19, என்பவரை, கடந்த டிச., 31ம் தேதி கலப்பு திருமணம் செய்தார்.இதையறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல்லடம் போலீசில் புகார் செய்து, ஐஸ்வர்யாவை ஜன., 2ம் தேதி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.மறுநாள், 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, உடலை எரித்து விட்டதாக, வட்டாத்திகோட்டை போலீசில் நவீன் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரை, ஜன., 10ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐஸ்வர்யா உடலை எரித்து, தடயங்களை மறைக்க உறுதுணையாக இருந்ததாக, பெருமாளின் உறவினரான சின்னராசு, திருச்செல்வம், முருகேசன் ஆகிய மூன்று பேரும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ரெங்கசாமி, 57, பிரபு, 36, சுப்பிரமணியன், 56, ஆகிய மூன்று பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை