உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் சின்னமனுார் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அவசியம்

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் சின்னமனுார் டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அவசியம்

சின்னமனூர், : சின்னமனூரில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த டிராபிக் போலீஸ் ஸ்டேசன் ஏற்படுத்த வேண்டும்.சின்னமனூர் நகராட்சி 27 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சின்னமனுாரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் சின்னமனூர் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் அதிக கிராம மக்கள் வரும் ஊராக சின்னமனூர் உள்ளது . மேலும் மேகமலையில் உள்ள 7 எஸ்டேட் தொழிலாளர்களும் இங்கு வருகின்றனர். சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடுகளில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கிறது. இந்த ரோடுகளில் மினி பஸ் நிறுத்துவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சின்னமனூர் போலீசாரின் அதிகார எல்லையும் அதிகம். எனவே அவர்களால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடிவதில்லை. மற்ற ஊர்களில் லோக்கல் போலீசார் மாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். சின்னமனூரில் இது நடப்பது இல்லை. எனவே சின்னமனூருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் எந்த பயனும் இல்லை. இங்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதே நிரந்தர தீர்வாகும். தேனி எஸ்.பி. சிவபிரசாத் அதற்கான பரிந்துரையை அரசிற்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை