உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வதேச கணிதவியல் மாநாடு

சர்வதேச கணிதவியல் மாநாடு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் சர்வதேச கணிதவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கல்லூரி தாளாளர் எம். தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார்.ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச்.முகமது மீரான் வரவேற்றார். ஒமன் நாட்டு பல்கலை கழக பேராசிரியர் சிவஞானம், காந்திகிராம பல்கலை பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் தனித்த கணித மற்றும் கணக்கீட்டு நுட்பங்கள் குறித்து பேசினார்கள். அன்றாட வாழ்வியல் பிரச்னைகளுக்கு தனித்த கணிதத்தின் மூலம் எவ்வாறு தீர்வு காணலாம் என விளக்கப்பட்டது.கணித துறை தலைவர் சாந்தி முன்னிலையில் பல்வேறு கல்லூரிகளின் - பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர். கணித துறை பேராசிரியர் ரேஷிமா நன்றி கூறினார். கணித துறை பேராசிரியர், ஹபீப்ராணி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி