உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேட்டை நாய்கள் தாக்கி பசு மாடுகள் காயம்

வேட்டை நாய்கள் தாக்கி பசு மாடுகள் காயம்

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தோட்டத்தில் இருந்த பசு மாடுகளை வேட்டை நாய்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக விவசாயி போலீசில் புகார் செய்துள்ளார்.வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கமலை 56, பஞ்சஞ்தாங்கி கண்மாய் அருகே தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிலர் வேட்டை நாய்களை வைத்து அப்பகுதியில் வேட்டையாடி வந்துள்ளனர். நாய்களுக்கு எதுவும் கிடைக்காததால் பசு மாடுகளை தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வருஷநாடு போலீசில் விவசாயி புகார் செய்துள்ளார். தினமும் இரவில் தோட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட வேட்டை நாய்களை வைத்து சிலர் வேட்டையாடி வருவதாகவும், இரவில் விவசாயிகள் தனியாக தோட்டத்திற்கு செல்லும்போது வேட்டை நாய்கள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து வருஷநாடு போலீசார் மற்றும் வனத்துறையினர் வேட்டை நாய்களை வைத்து அப்பகுதியில் சிறு விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்