உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி தொகுதியில் 12,51,189 வாக்காளர்கள் ஏப்., 26ல் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

இடுக்கி தொகுதியில் 12,51,189 வாக்காளர்கள் ஏப்., 26ல் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

மூணாறு, : இடுக்கி லோக்சபா தொகுதியில் 12,51, 189 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26ல் நடக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடுக்கி லோக்சபா தொகுதி மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் ஏழு சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி என்ற அந்தஸ்து பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகள், எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம், மூவாற்று புழா ஆகிய சட்டசபை தொகுதிகளை கொண்டதாகும்.தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ், சேவை வாக்காளர்கள் 1032 பேர் உள்பட 12,51, 189 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளதாக தெரிவித்தார். அதில் 85 வயதுக்கு மேல் 12,797, 18 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட முதல் வாக்காளர்கள் 18,748, மாற்றுத் திறனாளிகள் 10,041 பேர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை