உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 160 பேர் கைது

அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 160 பேர் கைது

தேனி: தேனியில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ., நிர்வாகிகள் 160 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்காக தி.மு.க., அரசை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் மாலையில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர். நேற்று அப்பகுதியில் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்பாட்டம் அறிவித்த இடத்திற்கு வரும் பா.ஜ., கட்சியினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இதனால் கட்சியினர், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.மாவட்ட தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் அறிவானந்தம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 160பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க., அரசிற்கு எதிராக கோஷமிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை