உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவணம் இல்லாத ரூ.3.6 லட்சம் பறிமுதல்

ஆவணம் இல்லாத ரூ.3.6 லட்சம் பறிமுதல்

ஆண்டிபட்டி : லோக்சபா தேர்தல் கண்காணிப்பு நிலை குழு 3ம் பிரிவில் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கண்டமனூர் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். கண்டமனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் ஒரு லட்சத்தை கைப்பற்றினர். இதே பகுதியில் கண்டமனூரைச் சேர்ந்த இருளாண்டி என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் ஒரு லட்சத்தையும் கைப்பற்றினர். பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கோழி வியாபாரியிடம் ரூ.1.6 லட்சம் பறிமுதல்

கம்பம்: நேற்று முன்தினம் இரவு கம்பமெட்டு மலையடிவாரத்தில் இருந்த நிலை கண்காணிப்பு குழு கேரளாவில் இருந்து வந்த கார் சோதனை செய்தது. காரில் வின்சென்ட் இருந்தார். அவர் கேரளாவில் கோழிக்கறி கடை நடத்துகிறார். கோழி வாங்க ரூ.1.6 லட்சம் கொண்டு வந்துள்ளார். நிலை கண்காணிப்பு குழு அதிகாரி வினோத், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை