உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி

தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி

தேனி : தேனி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவகிறது. தேனி, கொடுவிலார்பட்டி, வருஷநாடு, சின்னமனுார், தேவாரம் பகுதிகளில் தக்காளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது. தேனி உழவர் சந்தையில் ஜூலை 25ல் கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி, நேற்று கிலோ ரூ.15க்கு விற்பனை ஆனது.வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கூறுகையில், தேவாரம், தேனி, சின்னமனுார் மொத்த விற்பனை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தோராயமாக 60 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதில் 35 முதல் 40 டன் தக்காளி விருதுநகர், துாத்துக்குடி, திருசெந்துார், ராமநாதபுரம் மாவட்டங்கள், கேரளாவிற்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உழவர்சந்தைகள், சில்லரை கடைகளில் 20 டன்வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ. 180க்கு விற்பனையான நிலையில், நேற்று மாலை ரூ.220க்கு விற்பனையானது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை