உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்பகையில் தாக்க வந்த 10 பேர் மீது வழக்கு

முன்பகையில் தாக்க வந்த 10 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 50, இவரது தம்பி சுரேஷ் என்பவருக்கும் மற்றும் சிலருக்கும் குவாரி பங்கு பிரச்னை தொடர்பாக முன் பகை இருந்துள்ளது. இது குறித்து இரு நாட்களுக்கு முன் கரட்டுப்பட்டியில் உள்ள சன்னாசியப்பன் கோயிலில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாமல் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் கரட்டுப்பட்டியில் இருந்து மாலைப்பட்டி செல்லும்போது வாகனங்களில் வந்த சிலர் அவர்களை ஆயுதங்களை வைத்து மிரட்டி உள்ளனர். ஆண்டிபட்டி ஸ்டேஷனில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜா புகாரில் செல்லப்பாண்டி, சந்துரு, முருகன் உட்பட 10 பேர் மீது க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை