உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடை பெண் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு

ரேஷன் கடை பெண் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு

தேனி : ரேஷன் கடை பெண் விற்பனையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய கடமலைக்குண்டு தேவராஜ் நகரை சேர்ந்த லட்சுமணன் 40, மீது வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்காபுரம் கூட்டுறவு சங்க ரேஷன் கடை விற்பனையாளர் தீபா 32. இவர் ஜூலை 15ல் காலையில் பணியில் இருந்தார். அங்கு வந்த கடமலைக்குண்டு தேவராஜ்நகரை சேர்ந்த சொட்டுநீர் பாசன குழாய் விற்பனையாளர் லட்சுமணன், நான் பத்திரிகை நிருபர்' எனக்கூறி பொருட்கள் சரியாக வருகிறதா, உங்கள் கடை மீது புகார் எழுந்துள்ளது என விற்பனையாளரை மிரட்டி பேசியுள்ளார். அது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். ரேஷன் கடை விற்பனையாளர், பணம் கொடுக்க முடியாது' என்றார். லட்சுமணன் விற்பனையாளரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.விற்பனையாளர் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளருக்கு தகவல் அளித்துவிட்டு,எஸ்.ஐ., ராமகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். வீரபாண்டி போலீசார் லட்சுமணன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி