உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடுரோட்டில் தீ பிடித்த லோடு ஆட்டோ

நடுரோட்டில் தீ பிடித்த லோடு ஆட்டோ

பெரியகுளம்: பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் வெப்பக் காற்றினால் வெள்ளரிக்காய் ஏற்றி வந்த லோடு ஆட்டோ எரிந்தது.பெரியகுளம் வடகரை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் சித்திக் 45. இவரது லோடு ஆட்டோவில் நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு சோத்துப்பாறை பகுதியில் இருந்து அறுவடை செய்யப்பட்ட வெள்ளரிக்காய்களை பெரியகுளம் கொண்டு வந்துள்ளார். பெரியகுளம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே வரும்போது வெப்பக் காற்று அதிகரித்தது. அப்போது பேட்டரியில் ஒயர்கள் உரசி கசிவு காரணமாக தீ பிடித்தது. டிரைவர் சித்திக் தப்பினார். தீயணைப்பு நிலைய அலுவலர் பழநி தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். ஆட்டோ பின்புறம் சேதமானது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி