| ADDED : ஏப் 28, 2024 04:40 AM
தேனி, : மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட தலா 3 ஆண்கள், பெண்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டுபத்திரம், பதக்கம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் பணி செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறை, பொதுத்துறை, பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் மே 1 முதல் மே 15 மாலை 4:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையத்தில் சமர்ப்பித்த விண்ணப்ப நகல், உரிய ஆவணங்கள் தலா 3 நகல்கள், 3 புகைப்படம், போலீஸ் வழங்கிய சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை மே 18 மாலை 4:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.