உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ. தேர்தல் அலுவலகம் திறப்பு

பா.ஜ. தேர்தல் அலுவலகம் திறப்பு

கம்பம், : கம்பத்தில் பா.ஜ. சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ. சார்பில் தேர்தல் அலுவலகங்கள் திறந்து தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கம்பம் வேலப்பர் கோயில் வீதியில் சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நகர் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் வினோத் குமார் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர் தங்க பொன்ராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் லோக்சபா தொகுதி அமைப்பாளர் ராஜபாண்டியன் , இணை அமைப்பாளர் ராமநாதன், பொறுப்பாளர் ராஜாரவி பாலா, சின்னமனூர் நகர் தலைவர் லோகேந்திரராஜன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்