உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / களப்பணியில் பா.ஜ. முதலிடம் பிற கட்சிகளிடம் ஆர்வம் குறைவு

களப்பணியில் பா.ஜ. முதலிடம் பிற கட்சிகளிடம் ஆர்வம் குறைவு

கம்பம், : தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மூன்று பிரதான கட்சிகளே தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகின்றன.தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க.,வில் நாராயணசாமி, அ.ம.மு.க.வில் தினகரன், நாம் தமிழர் மதன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.தி.மு.க. கூட்டணியில் காங்.. இடது சாரிகள், வி. சி.க., மு.லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அ.ம.மு.க. பா.ஜ. கூட்டணியில் சில கட்சிகளுடன் போட்டியிடுகிறது.இதில் தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. மட்டுமே களப்பணியாற்றி வருகிறது . மூன்று கூட்டணியிலும் வேட்பாளருக்காக தேர்தல் பணி செய்வதில் பா.ஜ. நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. வை தவிர பிற கட்சிகளை தேட வேண்டிய நிலை உள்ளது. தி.மு.க. வில் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. பா.ஜ. மட்டுமே அ.ம.மு.க. வேட்பாளர் தினகரனுக்கு தீவிர களப்பணியாற்றி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை