உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

போடியில் கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

போடி : போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. வழக்கறிஞர்.இவர் தனியார் நிறுவனத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். தவணைத் தொகை 6825 யை வசூல் செய்ய நிறுவன மேலாளர்கள் முத்துநாகராஜ், சுதாகர் ஆகியோர் ராதாகிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு அவரை தரக்குறைவாக பேசி தவணைத் தொகை கட்டவில்லை என்றால் கட்டி தூக்கி சென்று கொலை செய்து விடுவோம் என டூவீலர் சாவியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் புகாரில் போடி டவுன் போலீசார் முத்து நாகராஜ், சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி