உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை

கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் தொடர் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மே 1 முதல் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருவது குறைந்தது. மே 10ல் மழையால் அருவிக்கு தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் மே 12 வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மே 12,இரவு தொடர்ந்து மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் நீர் வரத்து சீராகும் வரை தேவதானப்பட்டி ரேஞ்சர் டேவிட் ராஜா மறுதேதி குறிப்பிடாமல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தார். நுழைவு கேட் பூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை