உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவி ரோட்டில் குப்பைமேடு

சுருளி அருவி ரோட்டில் குப்பைமேடு

கூடலுார்: கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூடலுார், கருநாக்கமுத்தன்பட்டி வழியாக அதிகம் செல்கின்றனர். மேலும் தமிழகப் பகுதியில் இருந்து சுருளி அருவிக்கு சென்றபின் கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடலுார் வழியாக வருகின்றனர். இவ்வாறு வரும்போது ஊரின் துவக்கப் பகுதியில் ரோட்டோரத்தில் குவிந்திருக்கும் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் முகம் சுளித்து செல்கின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை