உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உரத்திற்காக கேரளா செல்லும் ஆட்டு சாணம்; ஆடு வளர்ப்போருக்கு கூடுதல் வருவாய்

உரத்திற்காக கேரளா செல்லும் ஆட்டு சாணம்; ஆடு வளர்ப்போருக்கு கூடுதல் வருவாய்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இருந்து ஏலத் தோட்டங்களில் உரத்திற்காக ஆட்டுச்சாணத்தை லாரிகளில் கேரளா கொண்டு செல்கின்றனர்.ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர் நரசிங்கபுரம், தெப்பம்பட்டி, ஏத்தக்கோயில், மறவபட்டி மற்றும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பகலில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை இரவில் கொட்டத்தில் அடைக்கின்றனர்.உரத்திற்காக ஆட்டுச் சாணத்தை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி ஏஜன்ட் மூலம் ஆடு வளர்ப்பவர்கள் பிளாஸ்டிக், சணல் பைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: ஆட்டுச் சாணத்தில் மண்ணின் வளத்திற்கு தேவையான இயற்கை சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனை உரமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு பாதிப்பு இல்லை. உள்ளூர் விவசாயிகள் ஆட்டு சாணத்தை உரமிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் கேரளாவுக்கு லாரிகள் மூலம் தினமும் ஆட்டுச் சாணம் அனுப்பப்படுகிறது.உள்ளூர் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கிடைகள் அமைத்து ஆடுகளை சில வாரங்கள் தங்க வைக்கின்றனர். இதன் மூலம் ஆட்டுச் சாணம் நிலத்தில் நேரடியாக கலந்து விடுகிறது.ஆட்டுச்சாணம் மூலம் ஆடு வளர்ப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வருவாய் கிடைக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை