மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.......
20 hour(s) ago
மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
20 hour(s) ago
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
20 hour(s) ago
தேனி : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், சார்நிலை அலுவலர்களுக்கான குரூப் - 4 தகுதி தேர்வு (ஜூன் 9ல்) நாளை மாவட்டத்தில் 154 தேர்வு மையங்களில் நடக்கிறது.இத்தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குரூப் - 4 தேர்வு தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள 154 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. தேர்வினை 40,869 பேர் எழுத உள்ளனர்.தேர்வை கண்காணித்திட வட்டாரத்திற்கு ஒரு துணை கலெக்டர் நிலையில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2044 அறை கண்காணிப்பாளர்கள், 41 இயக்க குழுக்கள், ஏழு பறக்கும் படை, வீடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தடையில்லா மின்சாரம், தேர்வு மையத்திற்கான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேர்வர்கள் மையத்திற்கு வந்து செல்ல போக்குவரத்துத்துறை மூலம் அரசு பஸ் வசதிகள் செய்திட முடிவு செய்தனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் பொறுப்பு அலுவலர்கள் சரவணன், கோகுல், துறை அலுவலரகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago