உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தொகுதி வளர்ச்சிக்கு பணியாற்றுவேன் : அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வாக்குறுதி

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தொகுதி வளர்ச்சிக்கு பணியாற்றுவேன் : அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வாக்குறுதி

ஆண்டிபட்டி : 'ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தொகுதி வளர்ச்சிக்காக பணியாற்றுவேன்' என ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூரில் நடந்த பிரசாரத்தில் அ.ம.மு.க.,வேட்பாளர் தினகரன் பேசினார்.அவர் பேசியதாவது: 14 ஆண்டுகள் நான் இங்கு வரவில்லை என்றாலும் உங்கள் நினைவுகளில் இருந்துள்ளேன் என்பது இங்கே வந்த பிறகு தான் தெரிகிறது. தேனி தொகுதி வளர்ச்சிக்காக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பணியாற்றக்கூடியவன் நான். நமது தொகுதிக்கான திட்டங்களை நிறைவேற்றி தரவும், தொகுதி அனைத்து திட்டங்களிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவும், அடிப்படை வசதிகள், விவசாயத்துக்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வரவும் பாடுபடுவேன்.மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதன் மூலம் நமது தொகுதிக்கு தேவையான திட்டங்களை பெற முடியும் என உறுதி தருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி