உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

வீரபாண்டி கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேவதானப்பட்டி முங்கிலனை காமாட்சியம்மன் கோயில்களில் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் கணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.வீரபாண்டியின் ரூ.3.40 கோடி செலவில் புதிய திருமண மண்டபம், ரூ.1.16 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். ஹிந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி முன்னிலை வகித்தார். கவுமாரியம்மன் கோயில் நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் தியாகராஜன், கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் கீதா பங்கேற்றனர்.வீரபாண்டி கோயில் அதிகாரிகள் கூறுகையில், திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் அமரும் வசதியும், 300 பேர் உணவருந்தும் வசதி உள்ளது. ஏ.சி., வசதியுடன் மணமக்கள் அறை வசதிகள் உள்ளன. மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகையாக ரூ.65 ஆயிரம், சுத்தம் செய்ய ரூ. 5ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும். வீரபாண்டியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் 10 ரூம்களில், 5 ஏ.சி., ரூம்கள் உள்ளன.இதற்கு வாடகையாக சாதாரண அறைகளுக்கு ரூ.1500, ஏ.சி., அறைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மண்டபம், அறை முன்பதிவு செய்ய கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில்ரூ.3.30 கோடி மதிப்பில் திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு பெரிகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமையில் நடந்தது. வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை