உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முழுமை பெறாத நெடுஞ்சாலைத்துறை பணிகள் துருப்பிடித்து சேதமடையும் பெயர் பலகைகள்

முழுமை பெறாத நெடுஞ்சாலைத்துறை பணிகள் துருப்பிடித்து சேதமடையும் பெயர் பலகைகள்

கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் முழுமை பெறாமல் பல மாதங்களாக முடங்கியுள்ளன. இதனால் ரோட்டோரத்தில் கிடக்கும் மெகா சைஸ் பெயர்ப் பலகைகள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, அரசு பணம் வீணாகிறது.கூடலுார் நகராட்சி கேரள எல்லையில் உள்ளது. கேரளாவில் இருந்து தினந்தோறும் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க ஏராளமான கேரள மக்கள் கூடலுாருக்கு வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புறவழிச் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த போதிலும் நகர்ப் பகுதியில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை குறையவில்லை. நகர்ப் பகுதியில் உள்ள 4. கி.மீ., தூர சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி 2022 ஏப்ரலில் துவங்கியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இடையூறாக இருந்த மின்கம்பங்கள், மரங்கள் அகற்றப்பட்டன. மூன்று இடங்களில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்தது. சென்டர் மீடியன் அமைக்கப்பட்டன.

முழுமை அடையாத பணிகள்

அனைத்து பணிகளும் முழுமை பெறாமல் உள்ளன. சென்டர் மீடியன் பல இடங்களில் உடைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றவே இல்லை. டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் அகற்றுவதில் முழுமை பெறாமல் உள்ளது. அகற்றிய மின்கம்பங்கள் சென்டர் மீடியன்களில் விபத்து ஏற்படும் வகையில் வைத்துள்ளனர்.

பெயர் பலகை சேதம்

மெகா சைஸ் வழிகாட்டி பெயர் பலகை வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே பயன்படுத்தாமல் ரோட்டோரத்தில் வைத்து துருப்பிடித்துள்ளது.புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோட்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. உடனடியாக முடங்கிய பணிகளை துவக்கி முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ