| ADDED : ஆக 13, 2024 12:30 AM
கம்பம் : 'தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி அருகே போதைப்பொருள் விற்பபனை அதிகரித்துள்ளது', என பா.ஜ., பொதுக் கூட்டத்தில் மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள் பேசினார்.கம்பத்தில் பா.ஜ பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. நகர் தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டியன் வரவேற்றார். பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பேசியதாவது :- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை, ஒரு இடத்தில் கூட தமிழகத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்று முதல்வர் குறை கூறுகிறார். தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை கூறுவார்களா. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் பரவி பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. விண்ணைத் தொட்டு வந்த தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர இறக்குமதி வரி 10 சதவீதம் குறைத்து சாமானியர்களும் வாங்கும் நிலையை பட்ஜெட் உருவாக்கி உள்ளது என்றார். கூட்டத்தில மாவட்ட பொது செயலாளர் தங்க பொன்ராசா, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் கோபிநாத் பாண்டியன், நகர் பொதுச் செயலாளர் சென்றாயப் பெருமாள் பங்கேற்றனர்.