உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அனைத்து ஊராட்சி கிராமங்களிலும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிர படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கடமலைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி, மேலப்பட்டி, கடமலைக்குண்டு, நேருஜி நகர், தென்பழனி பகுதிகளில் கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் பணிகளுடன் வீடுகளில் உள்ள தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை