மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.......
1 hour(s) ago
மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
1 hour(s) ago
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
1 hour(s) ago
நெல் வயல்களில் எலித்தொல்லை
1 hour(s) ago
மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை ஐந்து நாட்களில் 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.மூணாறில் மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் கோடையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு மலர் கண்காட்சி மே 1 ல் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பூக்கள் உள்ளிட்ட 1500க்கும் வகையிலான பூக்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அவற்றை கடந்த ஐந்து நாட்களில் 23 ஆயிரம் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.மலர் கண்காட்சியை முன்னிட்டு இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வார விடுமுறையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் பூங்காவில் பயணிகள் பெரும் அளவில் குவிந்தனர். காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை மலர் கண்காட்சியை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50. மே 12ல் மலர் கண்காட்சி நிறைவு பெறுகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago