உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அஞ்சல் சமூக வளர்ச்சி விழிப்புணர்வு விழா

அஞ்சல் சமூக வளர்ச்சி விழிப்புணர்வு விழா

தேனி : தேனி தபால் கோட்டத்தின் சார்பில், போடி, தேவதானப்பட்டி, பெரியகுளத்தில் தபால்துறை திட்டங்கள் இல்லம் தேடி கிடைப்பதற்கு அஞ்சல் சமூக வளர்ச்சி விழா' நடந்தது.பெரியகுளம் தென்கரை எட்வர்டு பள்ளி அருகே நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா தலைமை வகித்தார். நகர நல கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார், நிர்வாகி அன்பரசன், வழக்கறிஞர் நித்யானந்தன் முன்னிலை வகித்தனர். தேனி தபால் கோட்டத்தின் கண்காணிப்பாளர் குமரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு தபால்துறை சேமிப்பு கணக்கு, பள்ளி மாணவர்களுக்கான தபால்துறை சேமிப்புத் திட்டம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்குகள் துவக்குவது, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரங்கள், கிசான் விகாஸ் பத்திரங்கள், தபால்துறை ஆயுள் காப்பீடு, ஆதார் எடுத்தல், புதுப்பித்தல் விபரங்கள் குறித்து விளக்கப்பட்டது. பெரியகுளம் தலைமை தபால் அலுவலர் விக்னேஷ்சுந்தர், வளர்ச்சித்துறை அலுவலர் அழகுராஜா ஒருங்கிணைத்தனர். பங்கேற்ற பொதுமக்களின் 72 பேர் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கு சேவையை துவக்கி, அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். 33 பேர் ஆதார் சேவையில் பிழை திருத்தம், புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ