உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓ.பி.சி., கூட்டத்தில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓ.பி.சி., கூட்டத்தில் தீர்மானம்

தேனி : தேனியில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.,) சமுதாய உரிமைக்காக கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொம்மையக் கவுண்டன்பட்டி நடந்தது. கூட்டமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஓய்வு பெற்ற எஸ்.பி., ரத்தினசபாபதி, மாநிலத் துணைத் தலைவர் வெள்ளிங்கிரி, தொழில் அதிபர் நாகரத்தினம், மண்டலச் செயலாளர் சரவணதேவா, கள்ளர், ஒக்கலிக கவுடர், தேவாங்கர், மறவர், வீரசைவ பேரவை, அகமுடையார், விஸ்வகர்மா சமுதாயங்களை சேர்ந்த பாண்டியன், முத்துராஜேஸ், மனோககர், ராமகிருஷ்ணன், செல்வராஜ், குணசேகரன், விஸ்வா பாலமுருகன், அசோகன் உட்பட சமூதாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பீஹார், ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதுபோல் தமிழக அரசு தாமாக முன்வந்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் மும்முர்த்தி நன்றி தெரிவித்தார்.ஏற்பாடுகளை சன்னாசி, அன்பு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ