உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரயில்வே சுரங்கப்பாலத்தில் ரோடு சேதம்: வாகனங்கள் சிரமம்

ரயில்வே சுரங்கப்பாலத்தில் ரோடு சேதம்: வாகனங்கள் சிரமம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி - மேக்கிழார்பட்டி ரயில்வே சுரங்க பாலத்தில்சேதமடைந்த ரோட்டில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையால் பாலத்தின் கீழ் மழை நீர் தொடர்ந்து தேங்கி வந்தது. தேங்கிய மழை நீரில் வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் ரோடு சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மேடு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து கூத்தமேடு, மேக்கிழார்பட்டி, அனுப்பப்பட்டி,ரெங்காரம்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில் கிராமங்களுக்கு இந்த ரோட்டை கடந்து செல்ல வேண்டும். ரோட்டில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இரவில் இப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது. மேடு பள்ளமான ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்தை சந்திக்கிறது. பாலத்தின் அடியில் ரோட்டை சீரமைக்க ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை