உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்காச்சோள சிறப்பு திட்டத்தில் எக்டேருக்கு ரூ.6ஆயிரம் மானியம்

மக்காச்சோள சிறப்பு திட்டத்தில் எக்டேருக்கு ரூ.6ஆயிரம் மானியம்

தேனி : மாவட்டத்தில் சிறப்பு திட்டத்தில் மக்காச்சோள சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.6ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக 615 எக்டேர் மக்காச்சோள சாகுபடி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.12ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ விதை, ஒரு லிட்டர் திரவ உயிர் உரங்கள், 500 மி.லி., நானோ யூரியா, 12.5 கிலோ இயற்கை உரம் ஆகியன 50 சதவீத மானியத்தில் ரூ.6ஆயிரத்திற்கு வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் 8 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை